9ந்தேதி வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலர்ட் விட வாய்ப்பு உள்ளது.

கடந்த 4ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 2 நாளில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!