கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா..!


கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் மந்திரி எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார்.

இதற்கிடையே, முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முதல்மந்திரி எடியூரப்பா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!