அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்.. அத்துமீறிய லேப் டெக்னிஷியன்..!


கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்று பிறப்புறுப்பிலும் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும் என்று இளம்பெண்ணிடம் அத்துமீறி உள்ளார் ஒரு லேப் டெக்னிஷியன்.. இது தொடர்பாக புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு 24 வயசு பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.. இவருடன் வேலை பார்த்தவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. அதனால், இந்த பெண்ணும், தனக்கும் தொற்று இருக்கிறதா என செக்க செய்து கொள்ள, அங்கிருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்திற்கு சென்றார்.

அங்கு ஒரு லேப் டெக்னீசியன் இருந்துள்ளார்.. சம்பந்தப்பட்ட பெண்ணின் மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்து கொண்டார்.. பிறகு அந்தரங்க உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இந்த பெண்ணுக்கு கொரோனா டெஸ்ட் பற்றி தெரியாததால், அதற்கு சம்மதித்து உடன்பட்டுள்ளார்.

முகாமில் தனக்கு டெஸ்ட் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டது என்பது குறித்து தன்னுடைய தோழிகளிடம் சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரரிடம் இதை பற்றி தெரிவித்தனர்.. பிறகு இவர்கள் அனைவரும் சேர்ந்து டாக்டர்களிடம் சென்று கொரோனா டெஸ்ட் எப்படி எடுக்கப்படுகிறது என்று விசாரித்தனர்.

மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். இதையடுத்து, அந்த லேப் டெக்னீசியன் மீது போலீசில் புகார் தரப்பட்டது.. பாலியல் வன்கொடுமை வழக்கில் லேப் டெக்னீசியன் கைதும் செய்யப்பட்டுள்ளார். இப்போதெல்லாம் கொரோனாவைவிட, இந்த காமூகன்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

கடந்த வாரம்கூட கொரோனா மையத்தில் ஒருவர், தொற்று பாதித்த 40 வயசு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதேபோல, தொற்று இருக்கிறதா என்று செக் செய்கிறேன் என சொல்லி, 14 வயது சிறுவனின் டிரஸ்ஸை கழட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் ஒருவர்.. டெல்லி சத்தார்பூரில் 14 வயசு பெண்ணை கொரோனா மையத்தில் உள்ள பாத்ரூமிலேயே 19 வயசு இளைஞர் பலாத்காரம் செய்தார்.

திருச்சி அதிமுகவில் அமைப்பு ரீதியில் மாற்றம்.. மாநகர், புறநகர் மாவட்டத்திற்குள் திருத்தம்

இப்படி கொரோனா மையங்களிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இதற்கெல்லாம் என்ன காரணம்? சில தனிமைப்படுத்தப்படும் முகாம்கள் வீடுகள் போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது. நோயாளிகள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தனி தனி ரூம்கள் போல ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைதான் இந்த காமுகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. கொரோனா சிகிச்சை மையங்களிலும் சரி, முகாம்களிலும் சரி, தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது.. சிசிடிவி போன்றவைகளை பொருத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.. மேலும் கொரோனா டெஸ்ட்கள் குறித்த விழிப்புணர்வும் சொல்லப்பட வேண்டி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!