தமிழ் சினிமாவின் மாபியாக்கள் இவர்கள் தான்… சர்ச்சையை கிளப்பிய அஜித் பட நடிகை..!


தமிழ் சினிமாவின் தற்போதைய வியாபாரங்கள் அனைத்துமே மற்ற நடிகர்களைவிட தளபதி விஜய்க்கு கொஞ்சம் அதிகமாக இருப்பதை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

விஜய்யின் சமீபத்திய படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க ஸ்டாராக உள்ளார் தளபதி விஜய்.

இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாபியாக்கள் என தேவையில்லாமல் பிரபல நடிகை கூறியுள்ளது அனைவரையும் கோபப்படுத்தி உள்ளது.

மீரா மிதுன் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டும் என்றே தான் பிரபலமாக அவர்களை கொச்சையாக பேசி வருகிறார்.

சமீபத்தில் விஜய் மற்றும் ரஜினி ஆகிய இருவரின் சாதியை மையப்படுத்தி மீராமிதுன் குறிப்பிட்டது பல ரசிகர்களை கோபப்படுத்தியது. அதேபோல் நடிகை நயன்தாரா த்ரிஷா என முன்னணியில் இருக்கும் நடிகைகளை எச்சரித்தும் வருகிறார்.

இவர் என்னதான் பேசினாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என இருந்தாலும் இவரது பேச்சு நாளுக்கு நாள் வரம்பு மீறிச் செல்கிறது. தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமீபத்தில் மீராமிதுனை மிகவும் அசிங்கமாக திட்டி உள்ளனர்.

அதற்கு ரசிகர்களை திட்டாமல் நேரடியாக தளபதி விஜய் மற்றும் அவரது தந்தையை குறிப்பிட்டு கூறியது ரசிகர்கள் மத்தியில் கடும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீராமிதுன் உடன் சில ரசிகர்கள் நேரடியாக சண்டை போட்டு வருகின்றனர்.

தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மீரா மிதுன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.-Source: pettai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!