வைரலாகும் கே.ஜி.எப் 2 பட போஸ்டர்…. மிரட்டலான லுக்கில் சஞ்சய் தத்!


சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரஷாந்த் நீல் – யஷ் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. இப்படம் ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.

இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ஆக்ரோ‌ஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!