வாட்டர் டேங்கில் சிதைந்து கிடந்த கெளரியின் சடலம்…. பெங்களூரில் ஷாக்!


வாட்டர் டேங்கிற்குள் அழுகி போய் கிடந்தது கௌரியின் சடலம்.. அடையாளமே தெரியாத அளவுக்கு பெண்ணின் சடலம் உருமாறி இருந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில், எலஹங்கா நியூ டவுனில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்த பகுதியில் எஸ்எம்ஐஜி என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது.. இதில் குடும்பத்துடன் வசித்து வந்த பெண் கௌரி.. அவருக்கு 49 வயதாகிறது.. கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை.. அதனால் இவரது கணவர் நாகராஜ், கௌரியை பல இடங்களில் தேடினார்.. கடைசி வரை அவர் கிடைக்காதால், போலீசில் புகார் தந்தார்… போலீசாரும் அந்த புகாரின் பேரில் கௌரியை தேடி வந்தனர்.

இதனிடையே, கௌரி வசித்து வந்த அந்த அப்பார்ட்மென்ட்டில் திடீரென துர்நாற்றம் அடித்தது.. ஒட்டுமொத்த குடியிருப்புவாசிகளும் பீதியில் உறைந்தனர்.. எங்கிருந்து நாற்றம் வருகிறது என்று தெரியாமல் தேடினர்.. இறுதியில் வாட்டர் டேங்கில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டறிந்தனர்.. பிறகு ஒரு பிளம்பரை வரவழைத்து, அந்த டேங்கில் இறங்கி என்ன ஏதென்று பார்க்க சொன்னார்கள்.

அந்த பிளம்பர் உள்ளே இறங்கும்போதே கவுரியின் சடலம் தென்பட ஆரம்பித்துவிட்டது.. உடம்பெல்லாம் நீரில் அழுகி சிதைந்து போய் இருந்தது.. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர். சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.. கௌரி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவராம்.

வீட்டு மனைகள் வாங்கி தருவதாக பலரிடம் பணத்தை வாங்கி, அந்த பணத்தை ஜெயசூர்யா பில்டர்ஸ்க்கு தந்துள்ளார்.. ஆனால், ஜெயசூர்யா டெவலப்பர்ஸ் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி உள்ளனர்.. மனையும் தராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றியதால், தற்கொலை செய்ய முடிவெடுத்தார் கௌரி.. தற்கொலைக்கு முன்பு கௌரி ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார்.

சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

அதில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பெயரும், யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற விவரங்களையும் விலாவரியாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த கடிதத்தின் அடிப்படையில், ஜெயசூர்யா டெவலப்பர்களின் கோபி, பார்கவ், தேவராஜப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், விசாரணையும் தீவிரமாகி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!