நெட்டிசன்கள் வசம் சிக்கிய பிச்சைக்காரன் 2 – அப்படியேவா காப்பி அடிக்குறது..?


விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகி நெட்டிசன்கள் வசம் சிக்கி இருக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நாயகனாக நடிக்க வந்தபின் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அப்படத்தின் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பார்வை இன்று (ஜூலை 24) விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. ஆனால், இந்த டிசைனில் ஒரு காப்பி சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்த்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்பட போஸ்டரை அப்படத்தின் டிசைன் ஒன்றில் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த போஸ்டரிலிருந்த கூட்டத்தை அப்படியே காப்பி எடுத்து பிச்சைக்காரன் 2 பட போஸ்டருக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதைக் கண்டுபிடித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிச்சைக்காரன் 2வின் இந்த காப்பி விவகாரத்தை பரப்பி வருகிறார்கள். மேலும், அப்படியேவா காப்பி அடிக்குறது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!