கையில் துப்பாக்கி.. முகம் முழுக்க பூரிப்பு.. யார் தெரியுமா இந்தப் பொண்ணு?


கையில் துப்பாக்கி, முகத்தில் பூரிப்புடன், கெத்து காட்டி உட்கார்ந்திருக்கும் இந்த பெண் யார் என்று தெரிகிறதா… இவருக்குதான் நாலாபக்கம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் என்றாலே நமக்கு உள்ளூக்குள் கதி கலங்கி போவது இயல்புதான்.. அதற்கு காரணம் அந்த நாட்டில் நடக்கும் வன்முறை கலாச்சாரம்.. தாலிபன் பயங்கரவாதிகள், போட்டி அரசாங்கம் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது

அதாவது இவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக யாராவது செயல்பட்டால் அவர்கள் காலி.. உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள்.. இது அங்கு எழுதப்படாத விதி!

அந்த வகையில், ஷோர் மாகாணத்தில் சினிமா மாதிரியே ஒரு திரில்லிங் சம்பவம் நடந்தது.. க்ரிவா என்ற ஊரில் பஞ்சாயத்துத் தலைவர், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்… இந்த விஷயம் தாலிபன் தீவிரவாதிகளுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், அந்த பஞ்சாயத்து தலைவரை தேடி சென்று, வீட்டுக்குள் இருந்த அவரை வெளியே இழுத்து போட்டு உதைத்து தாக்கினர்.

கணவனை சரமாரி அடிப்பதை பார்த்த அவரது மனைவி, பதறி அடித்து கொண்டே ஓடிவந்தார்.. கணவனை விட்டுவிடும்படி கெஞ்சினார்.. ஆனால், அந்த தீவிரவாதிகள், கணவனையும், மனைவியையும் வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொன்றுவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் நடக்கும்போது, இந்த தம்பதியின் 13 வயது பெண், வீட்டிற்குள்தான் இருந்தார்.. அவர் பெயர் உமர் கல்.. கண்ணெதிரிலேயே அம்மாவும், அப்பாவும் துடிதுடித்து இறப்பதை கண்டு கதறினார்.. ஆவேசமானார்.. உடனே வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்து, தன் பெற்றோரை சுட்டு கொன்ற அந்த 2 தீவிரவாதிகளையும் சுட்டு பொசுக்கினார்.

ஆவேசம், கோபம், ஆத்திரத்தில் பெண் இருந்தாலும், 2 பேரையுமே குறி பார்த்து சுட்டதில், அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.. இதனிடையே, 2 தீவிரவாதிகளை தேடி மற்றவர்களும் அங்கு ஓடிவந்தனர்.. அவர்களையும் சுட ஆரம்பிக்கவும், உயிரை கையில் பிடித்து கொண்டு அலறி ஓடிவிட்டனர்.. தப்பி ஓடியவர்கள் எப்படியும் பெண் பழி தீர்க்க வருவார்கள் என்பதை கிராம மக்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.

அதனால், உமல் கல் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.. உமர் கல்லையும், அவரது தம்பியையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் அடைத்து மறைத்தும் வைத்துவிட்டனர்.. எதிர்பார்த்ததுபோலவே, அந்த தாலிபன்கள் கையில் துப்பாக்கி, கத்தியுடன் உமர்கல்லை தேடி வந்தனர்.. ஊரெல்லாம் வலை வீசி தேடினர்.

எங்கெங்கோ வெறிகொண்டு அலைந்தும் உமரை காணவில்லை.. இன்னமும்தேடி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனிடையே 13 வயசு பெண்ணின் இந்த வீர செயல் சோஷியல் மீடியாவில் பரவி.டடுது.. பலரும் உமருக்கு வாழத்து சொல்லி வருகிறார்கள்.. பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. ஒரே நாளில் உமர் புகழ் உலகம் முழுக்க பரவி வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!