7வது மாடியில்.. லிப்ட் பள்ளத்தில் விழுந்து.. 15 வயசு சிறுவனின் பகீர் முடிவு!


7வது மாடிக்கு டீ குடிக்க போன ரியாஸ் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.. லிப்ட் பள்ளத்தில் அப்படியே மலாக்காக விழுந்து, உடல் சிதறி இறந்து போனான் 15 வயது பிஞ்சு!

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் ஜாகீர் ஹசன்… இவர் ஒரு கார் டிரைவர்.. தற்போது லாக்டவுன் என்பதால், கார் ஓட்ட வழியில்லை.. அதனால் வருமானமும் இல்லை.. குடும்பமே கையில் காசு இல்லாமல் தவித்தது.

இப்போதைக்கு சென்னையில் தொற்று தீர்வதாகவும் இல்லை என்பதால், வீட்டிலேயே ஒரு டீ தயார் செய்து, பக்கத்து கட்டிடங்களில் செயல்பட்டு வரும் ஆபீஸ்களுக்கு தரலாம் என்று முடிவு செய்தார்.. அதன்படியே வீட்டில் டீ தயாரித்தார்.. அதை அக்கம் பக்கம் கட்டிடங்களில் கொண்டு போய் தருதவற்காக தன் மகனை உதவிக்கு வைத்து கொண்டார்.. மகனுக்கு 15 வயதாகிறது.. பெயர் ரியாஸ்.

படிக்கிற பையன் இப்படி எல்லாம் டீ விற்க வரக்கூடாது என்று அப்பாசொல்லியும், மகன் கேட்கவில்லை.. ஸ்கூல் லீவுதானே, உதவியா இருக்கேன் என்று சொல்லி, அப்பாவுடனே டீ கொண்டு போய் தரும் வேலையை செய்து வந்தான்.

அப்படிதான் டீ கேனை எடுத்து கொண்டு மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ விற்க சென்றிருக்கிறான்.. அது 7வது மாடி கட்டிடம்.. தொழிலாளிகளுக்கு டீ கொடுத்துவிட்டு, அங்கிருந்து கீழே இறங்கி வந்தான்.. அப்போது 6வது மாடியில் லிப்ட் அமைப்பதற்காக கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தனர்.

அந்த சந்துக்குள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டான்.. விழுந்த வேகத்திலேயே ரியாஸ் உடல் பரிதாபமாக பிரிந்தது. தகவலறிந்து ஜாகிர் ஓடிவந்தார். டீ விற்க போன மகன் உடல் நசுங்கி கிடப்பதை பார்து கதறி அழுதார்.. உன்னை டீ விற்க வர வேணாம்னு சொன்னேனே, கேட்டியா? என்று புரண்டு புரண்டு அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. அந்த லிப்ட் போடுவதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில் எந்த தடுப்புகளும் வைக்காமல் இருந்திருக்கிறார்கள்.. தடுப்பு வைத்திருந்தால் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.. கட்டிடம் கட்டுவதில் இருந்த அஜாக்கிரதைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.. லாக்டவுனில் வறுமையை போக்க டீ விற்க சென்றால், அது உயிரையே பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!