பிக்பாஸ் 4-வது சீசன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!


பிக்பாஸ் 4-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.


தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தாண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. -Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!