கொரோனா வார்டில் 15 வயது சிறுமிக்கு செக்யூரிட்டி செய்த கொடூரம்..!


பாட்னாவில் பாதுகாப்பு காவலர் ஒருவர் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்த பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலிலும் சில கொடூர சம்பவங்கள் நடக்கிறது.

கடந்த ஜூலை எட்டாம் தேதி பாட்னா பார் ரயில் நிலையத்தில் தனியே சுற்றி திரிந்தார் பதினைந்து வயது சிறுமி. போலிசார் அவரை மீட்டு குழந்தைகள் நலவாரியத்திடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் அந்த சிறுமியை பாட்னா மருத்துவக் கல்லூரி மேலும் மருத்துவமனையில் (பி.எம்.சி.எச்) கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்க வைத்தனர் அந்த சிறுமிக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்த சிறுமியின் பரிசோதனை முடிவு வரும் வரை அங்கு தங்க வைத்தனர் .

கொரோனா வார்டில் அன்று இரவு பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்தவர் மகேஷ் பிரசாத். இவருக்கு வயது (40). இவர் அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் குளியலறைக்குக் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் இதை பற்றி சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

அந்த சிறுமி பயந்து கொண்டு இதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் சைல்ட் ஹெல்ப்லைன் உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை அந்த சிறுமியை காண வந்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் அவர்களிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சைல்ட் ஹெல்ப்லைன் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும் பாட்னா மஹிலா காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்த்தி ஜெய்ஸ்வால் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம் என்றும், குற்றம் செய்யப்பட்ட மகேஷ் என்பவரை கைது செய்துள்ளோம் என்று கூறினார். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளம் அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!