100 கி.மீ நடந்து 7 நாட்களில் முன்னாள் எஜமானர்களிடம் வந்தடைந்த ஒட்டகம்!


7 நாட்களில் தனியாக 100 கி.மீ நடந்து முன்னாள் எஜமானர்களிடம் வந்தடைந்துள்ளது ஒட்டகம் ஒன்று.

பொதுவாக, நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் மிகவும் பாசமாக இருக்கும். அதனை வேறு எங்காவது சென்று விட்டுவந்தால் கூட தனியாகவே வீட்டிற்கு திரும்பிவிடும். மிகவும் நன்றியுள்ள பிராணி எனவும் நாயகளை சொல்வதுண்டு. அந்தவகையில், தற்போது ஒட்டகம் ஒன்று தன் எஜமானர்கள் மீது வைத்துள்ள பாசம் காரணமாக தனியாக 100 கி.மீ நடந்து தன் முன்னாள் எஜமானர்களின் வீட்டிற்கு வந்தடைந்துள்ளது.

மங்கோலியாவில் வசித்துவரும் தம்பதியினர் ஒட்டகம் ஒன்றை வளர்த்துவந்துள்ளனர். அந்த ஒட்டகத்திற்கு வயதாகிவிட்டதால், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அதனை மற்றொரு நபரிடம் விற்றுள்ளனர். ஆனால், அந்த ஒட்டகம் அங்கிருந்து தப்பி தன் பழைய எஜமானர்களிடமே வந்தடைந்துள்ளது. தன் பழைய எஜமானர்கள் மீது வைத்திருந்த பாசம் காரணமாக பாலைவன பகுதிகளில் தனியாகவே சுமார் 100 கி.மீ நடந்துவந்துள்ளது.

அந்த ஒட்டகத்தைப் பார்த்த ஒருவர் அதன் முன்னாள் உரிமையாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதனை அடுத்து, அந்த ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு அதனை வந்து பார்த்துள்ளனர் அந்த தம்பதியினர். அவர்கள் பார்க்கும்போது மிகவும் களைப்பாகவும் ஆங்காங்கே சில காயங்கள் ஏற்பட்டவண்ணம் இருந்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த ஒட்டகம் இவ்வளவு பாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் இவ்வளவு தூரம் நந்தே வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது, அந்த ஒட்டகத்தை விற்றவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த ஒட்டகத்தை தாங்களே வைத்துக்கொள்வதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒட்டகத்தை தருவதாகவும் இந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

பாச மிகுதியால் அவ்வளவு தூரம் நடந்துவந்த ஒட்டகத்தை குடும்பத்தின் உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கான அடையாளமாக அத கழுத்தில் நீல நிற துணி ஒன்றை கட்டிவிட்டுள்ளனர் அந்த தம்பதி.-Source: asia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!