காணாமல் போன நடிகையின் உடல் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பிரபல பாலிவுட் நடிகை நயா ரிவேரா(33). இவர், நடிகர் ரியான் டோர்சே என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக ரியான் டோர்சே-நயா ரிவேரா விவாகரத்து செய்து கொண்டனர். இதனால், நடிகை ரிவேரா தனது 4 வயது மகனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். இந்நிலையில், கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை தனது மகனுடன் படகு சவாரி சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் அவர்கள் சென்ற படகு திரும்பவில்லை என்றதால், சந்தேகம் அடைந்த பரமாரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்த பொது, நடு ஏரியில் அந்தப் படகு நின்று கொண்டிருந்தது. ஆனால், அதில் அவர் மகன் மட்டுமே கவச உடை அணிந்து, தூங்கியபடி இருந்துள்ளான். நயா ரிவேராவின் லைஃப் ஜாக்கெட்டும் படகில் இருந்துள்ளது.

இதையடுத்து, ஹெலிகாப்டர், ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி போலீசாரும் மீட்பு படையினரும் நயா ரிவேராவைத் தேடி வந்த நிலையில், ஏரியின் அருகே காரில் இறங்கி, தனது மகனுடன் நயா செல்வதும், படகில் மகன் மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

மேலும், ரியாவின் 4 வயது மகன் அவனது தந்தையான ரியான் டோர்சேயிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு நயா ரிவேராவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நயாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் 35 முதல் 60 அடி இருந்ததால், அந்தப் பகுதியில் நயாவும் அவர் மகனும் நீந்தி வந்து, மகனை அவர் படகில் ஏற்றியிருக்கலாம் எனவும், அவர் ஏற முயன்றபோது, நீரின் வேகம் அதிகரித்து, படகு நகன்று அவர் தண்ணீருக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனால், நயா ரிவேராவின் மறைவுக்கு சினிமா, டிவி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, க்ளீ (Glee) என்ற தொடரில் நடிகை நயா ரிவேரா நடித்ததன் மூலம் அதிக பிரபலம் அடைந்தார். இத்தொடரில் நடித்த கோரி மான்டீத் 7 வருடங்களுக்கு முன், மதுவில் போதைப்பொருள் கலந்து குடித்ததால் பலியானார். இத்தொடரில் நடித்த, ரிவேராவின் முன்னாள் காதலரான மார்க் சல்லிங் 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது அதில் நடித்த நயா ரிவேராவும் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!