உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயந்தி..!


எம்ஜிஆர் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருடன் நடித்த நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருடன் படகோட்டியில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. பின்னர் ஜெமினி கணேசனுடன் புன்னகை, இரு கோடுகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெயந்தி திடீரென பெங்களூரு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்குவென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் இன்ஹேலர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவர்கள் நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!