கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு..!


வடிவேலு படத்தில் ஒரு டயலாக் வருமே.. “செத்து செத்து விளையாடலாமா” என்று… கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு விபரீத விளையாட்டை மாணவர்கள் கையிலெடுத்து உள்ளனர்.. சுருண்டு சுருண்டு செத்து மடிவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால், யாருக்கு முதலில் கொரோனா வரும் என்பதை கண்டுபிடிக்க ஒரு பார்ட்டி நடத்தி, விடிய விடிய கூத்தடித்தும் வருகிறார்கள்.. தொற்றில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில்தான் இந்த விளையாட்டும் நடந்துள்ளது.

இப்போதைக்கு அமெரிக்காவில்தான் தொற்று அதிகம்.. பாதிக்கப்பட்டவர்களும், தொற்றால் உயிரிழந்தவர்களும் இங்குதான் அதிகம்.. இருந்தாலும் இப்போது வரை கெத்து குறையாமல் பேசி வருகிறார் அதிபர்… அதனால்தானோ என்னவோ அந்நாட்டு மக்களுக்கு இனனும் சீரியஸ்தன்மை வரவில்லையோ என்று தோன்றுகிறது. இதை பற்றி தலைமை மருத்துவர் அந்தோணி ஃபாசியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இங்கு அலபாமாவில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு விளையாட்டு நடத்தி உள்ளனர்.. அதன்படி, கொரோனா பாதிப்பு உறுதி அடைந்த ஒருவரை அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து நெருங்கி பழகுவது, ஒட்டி உராசுவது, அந்நபருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது.. இதில் யாருக்கு தொற்று முதலில் வரும் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த விளையாட்டு.

இதற்காகவே பார்ட்டியை கல்லூரி மாணவர்கள் நடத்தி உள்ளனர்.. இதற்கு பந்தயம் கட்டியும் விளையாடி உள்ளனர்.. அந்த பார்ட்டியில் ஒரு பாத்திரம் வைத்திருக்கிறார்கள்.. அந்த பாத்திரத்தில் பந்தய தொகயை போட வேண்டும்.. யாருக்கு முதலில் கொரோனா வருகிறதோ, அவருக்கு அந்த பணம் முழுவதும் கொடுக்கப்படும்.

இதை பற்றி அந்நகர நகராட்சி கவுன்சிலர் சோன்யா மெக்கின்ஸ்டிரி என்பவர் சொல்லும்போது,

இந்த பிள்ளைங்களுக்கு கொஞ்சம்கூட புரிதல் இல்லை.. அதனால்தான் இப்படி செய்து வருகிறார்கள்.. இதெல்லாம் வேணும்னே செய்யற காரியம்” என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அலபாமா மாணவர்கள் என்றி

சீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்

அலபாமாவை தவிர, மட்டுமல்லாது வேறு சில முக்கியமான காலேஜ்களிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், இந்த மாணவர்கள் எந்த கல்லூரி, எந்த பல்கலையை சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டனர்.

இந்த விளையாட்டு அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. தனிமனித இடைவெளி குறித்து கடந்த 5 மாதமாக உலகமே கதறி வருகிறது.. நோயின் தீவிரம் இனிமேல்தான் தீவிரமாகும் என்றும், அதனை அனைவரும் எதிர்க்க தயாராக வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.. அப்படி இருக்கும்போது இந்த மாணவர்கள் கொஞ்சம்கூட பயமில்லாமல், சீரியஸ்தன்மையை உணராமல் இப்படி விளையாடி கொண்டிருப்பதை அந்நாட்டு அதிகாரிகள்தான் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு தர வேண்டும்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!