மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை மேலாளர்… ஏன் தெரியுமா..?


நெல்லூரில் உள்ள ஆந்திர பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கார்பரேசன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லூரில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கழக அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் துணை மேலாளர் பாஸ்கரிடம் மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் ஏன் முகக் கவசம் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பாஸ்கர் அந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் காயம் அடைந்தார். அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் தடுக்க முயற்சித்த போதும் பலன் அளிக்கவில்லை.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூன் 27-ந்தேதி) நடைபெற்றது. ஆனால் உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே மேலாளர் தாக்கும் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கார்பரேசன் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்ததுடன், துறை வாரியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே இன்னும் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லூர் மாவட்ட எஸ்.பி.க்கு டிஜிபி சவாங் உத்தரவிட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!