ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் சென்னையில் மரணம்… அதிர வைத்த காரணம்..!


சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை 74622 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது ஊடக துறையினர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முன்களத்தில் நின்று செய்திகளை வழங்கி வரும் ஊடகத்துறையினரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படி பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஊடக துறையில் இருந்து மரணம் அடையும் முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 40 வயதுதான். 40 வயதிலேயே அவர் கொரோனா காரணமாக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கொரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!