ஆசையாக பிரியாணி வாங்கி தர கேட்ட மனைவி… கணவர் மறுப்பு – பின் அரங்கேறிய கொடூரம்..!


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவருடைய மனைவி பெயர் சௌமியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் மனோகரன் மாமல்லபுரம் பகுதிகளில் சிற்ப வேலை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

கொரானோ ஊரடங்கினால் வேலையிழந்த மனோகரன்:

மேலும் தற்பொழுது கொரானோ தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு இருப்பதனால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார் மனோகரன்.

பிரியாணி கேட்ட மனைவி:

சம்பவத்தன்று சௌமியா தனது கணவருடன் பிரியாணி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார் .மனைவியிடம் மனோகரன் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு இருப்பதினால் வேலை இல்லாமல் இருப்பதாகவும் பிரியாணி வாங்குவதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

மனமுடைந்த மனைவி:

பிரியாணி வாங்கி தராததால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது இதனால் சௌமியா தனது கணவரின் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

தீக்குளித்த சௌமியா:

பிரியாணிக்காக கணவன்-மனைவி இடையே நடைபெற்ற பிரச்சனையால் சௌமியா இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு சென்றவுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்:

மேலும் தீக்குளித்து எரியும் பொழுது சௌமியா அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சௌமியா மீது தீ எரிந்ததை பார்த்து செங்கல்பட்டு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர்:

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையை அப்பகுதிகளில் மேற்கொண்டனர் .

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி:

தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சௌமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் கணவன் மனைவியிடையே பிரியாணிக்காக பிரச்சனை ஏற்பட்டதால் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!