நிறைய ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்..!


சரஸ்வதிக்கு ஏகப்பட்ட கள்ளக்காதலர்கள்.. தன் சந்தோஷத்துக்கு மகள் தொந்தரவாக இருந்ததால், கட்டையால் அடித்து அவரை கொன்றே விட்டார் சரஸ்வதி.. இப்போது 7 வருஷம் ஜெயில் தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சரஸ்வதி.. 29 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு 5 குழந்தைகள்.

ஆனால் சரஸ்வதிக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. பல பேருடன் கள்ளக்காதல் நீடித்தும் வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் வருஷம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி சரஸ்வதியின் மகள் திரிஷா திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்… திரிஷாவுக்கு 4 வயசு.

குழந்தையை டெஸ்ட் செய்த டாக்டர்கள் திரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.. அதனால் இந்த விஷயம் போலீசுக்கு போனது.. ஊட்டி நகர மேற்கு போலீசார் சந்தேக மரணமாக இதன்மீது கேஸ் பதிவு செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.

அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில் திரிஷாவின் தலையில் பலமான அடிபட்டுள்ளதாகவும், யாரோ கட்டையால் அடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.. அதனால் முதல் கிடுக்கிப்பிடி விசாரணையே சரஸ்வதியிடம் ஆரம்பித்தனர்.. எடுத்த எடுப்பிலேயே உளறி கொட்டினார் சரஸ்வதி.

கள்ளக்காதல் செய்யும்போது ஒருமுறை திரிஷா நேரில் பார்த்துவிட்டாராம்.. இந்த காதல்களுக்கு எல்லாம் திரிஷா தடையாக இருந்ததால்தான் கட்டையால் அடித்து கொன்றதாக பெற்ற தாய் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து சரஸ்வதியை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.. அதன்படி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளையே கொலை செய்த சரஸ்வதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சரஸ்வதியை கோவை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். சரஸ்வதியை கைது செய்தபோதே, மற்ற குழந்தைகள் 4 பேரையும் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.. அங்குதான் அவர்கள் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!