நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி ராகுல் காந்தி இப்படி குறிப்பிட்டாரா..?


சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகுல் காந்தியின் இரங்கல் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறை, அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் இவரது உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு ராகுல் காந்தி பதிவிட்ட இரங்கல் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் ட்வீட்டில் ராகுல் காந்தி ராஜ்புட்டை கிரிக்கெட் வீரர் என குறிப்பிட்டிருக்கிறார்.

வைரல் ட்வீட் ஸ்கிரீன்ஷாட்களை ஆய்வு செய்ததில் அது மார்ஃபிங் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை ராகுல் காந்தி நடிகர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

விஷமிகள் ராகுல் காந்தி ட்வீட்டில் நடிகர் என்ற எழுத்திற்கு பதில் கிரிக்கெட் வீரர் என மாற்றி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுவே டிரெண்ட் ஆகி நெட்டிசன்களை குழப்பியது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!