வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டு மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடிய வீடியோ


அமெரிக்காவில் போலீசார் பிடியில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு தனது மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மினபொலிஸ் நகரில் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கடந்த 25-ம் தேதி போலீசார் பிடியில் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு தனது மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவரது மகள் மற்றும் ஜார்ஜ் இருவரும் சேர்ந்து “Daddy changed the world”என கூறும் வீடியோ காண்போரை மனம் உருகச் செய்துள்ளது.-Source: news18

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!