கருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்காரருக்கு.. மனைவி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?


“என்னை கொல்லாதீங்க.. மூச்சு திணறுது” என்று கதறியும்கூட,, 10 நிமிஷத்துக்கு கருப்பின இளைஞரின் கழுத்திலேயே காலை மிதித்து கொன்ற போலீஸ்காரருக்கு அவரது மனைவி தண்டனை தர போகிறார்.. இவ்வளவு மோசமாக ஒரு கொலையை செய்த கணவரை டைவர்ஸ் செய்ய போகிறாராம்

அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கருப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் தேதி 20 டாலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.

இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.. எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல, இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளது மேலும் கொதிப்பை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.. அமெரிக்கா போல வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கருப்பின இளைஞரை கொலை செய்த அந்த போலீசாரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதுதொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.. போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கழுத்தை நெரித்து ஜார்ஜை கொன்ற அந்த போலீஸ்காரரின் மனைவி அவரை டைவர்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.. இது தொடர்பாக அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார். தன்னுடைய கணவர் செய்த காரியம், தன்னை மனதளவில் அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டதாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!