இறந்து 3 மாசமாச்சு.. இது தெரியாமல் சுத்திசுத்தி.. கண்ணீரை வரவழைத்த துயரம்..!


எஜமானர் இறந்து போய் 3 மாசமாச்சு.. இது தெரியாத அவரது வளர்ப்பு நாய், அந்த ஆஸ்பத்திரி வாசலிலேயே அவருக்காக தவித்தபடியே காத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீனாவின் வூகான் நகரை சேர்ந்த நபர் ஒரு நாயை வளர்த்து வந்தார்.. அந்த நாய் அவரை விட்டு எங்கேயுமே போகாது.. 7 வருடங்கள் எஜமானருக்கும், நாய்க்கும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில்தான் சீனாவில் கொரோனா கொடூரமாக தாண்டவமாடியது.. அதில் எஜமானருக்கும் தொற்று வந்துவிட்டது.. 3 மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு வைரஸ் இருப்பது தெரியவந்தது.. அதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர்.. ஆனால் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
ஆனால், எஜமானரை அனுமதித்த அந்த ஆஸ்பத்திரிக்கு முதல் நாளிலேயே அந்த நாயும் பின்னாடியே வந்தது.. அவர் சிகிச்சையில் இருந்தபோதும் அந்த நாய் ஆஸ்பத்திரி வாசலில்தான் உட்கார்ந்திருந்தது.. எஜமானர் எப்போது வருவார் என்று தெரியாததால், வேறு எங்குமே அது நகர்ந்து செல்லவில்லை. எஜமானர் இறந்தது தெரியாமலும் அந்த நாய் அங்கேதான் காத்திருந்தது.

இதை பார்த்த ஊழியர்கள், அந்த நாய்க்கு ஆஸ்பத்திரி கேன்டீனில் இருந்து பிஸ்கட், சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருந்தனர்.. பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாயை வேறு எங்காவது கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முயற்சி செய்தனர்.. அதன்படியே எங்கே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாலும், திரும்பவும் ஆஸ்பத்திரி வாசலுக்கே அந்த நாய் வந்துவிட்டதாம்.

எஜமானர் எப்போது வருவார் என்ற தவிப்பிலேயே சுற்றி சுற்றி அங்கேயே திரிந்தபடி இருந்துள்ளது.. 3 மாசமாகியும் அந்த நாய் இப்படி காத்திருப்பதை கண்டு அனைவருக்குமே மனசு கஷ்டமாகிவிட்டது… நோயாளிகள் சிலரும் அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவும், விலங்குகள் காப்பகத்தில் இப்போதைக்கு கொண்டு போய் விடப்பட்டுள்ளது… ஆனால் எஜமானருக்காக 3 மாசமாக அந்த நாய் உட்கார்ந்திருந்த இடத்தை இப்போதுகூட நினைவுகூர்ந்தபடியே மருத்துவமனை ஊழியர்கள் கடந்து செல்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் இன்று ஒரு செய்தி வந்திருக்கிறது.. வயதான அப்பா மாரடைப்பில் இறந்துவிடவும், நாக்பூரில் இருக்கும் மகனுக்கு தகவல் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ நேரில் வர முடியாது என்றும், பெற்ற தந்தையின் சடலத்தை வாங்கவும் விருப்பம் இல்லை என்றும் சொல்லிவிட்டாராம்.

அதனால் முஸ்லிம்கள் எல்லாம் சேர்ந்து அந்த பெரியவரின் சடலத்தை தூக்கி அவரது இந்து முறைப்படியே அடக்கமும் செய்துள்ளனர்.. நம் நாட்டில் பெற்ற மகன்கள் சிலர் இப்படி இருக்கும்போது, இந்த நாய் எதையோ, அவர்களுக்கு செவுளில் அறைந்தது போல ஒரு செய்தியை சொல்வது போலவே இருக்கிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!