ஏழை மக்களுக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்


கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.

மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பே‌ஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.

இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100 சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெ‌ஷலாக செய்யப்பட்டது. பே‌ஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.

இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!