‘சித்தியுடன்’ கள்ளக்காதல்… ஆத்திரமடைந்த இளைஞர் செய்த கொடூரம்..!


சித்தியுடன் காதல் வந்துவிட்டது.. இதை தட்டிக் கேட்க போன அத்தையை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒரு இளைஞர்.. முறைதவறி, உறவு தவறி நடந்த இந்த சம்பவமும், அதையொட்டி நடந்த கொலையும் மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன்.. இவருடைய மனைவி குணசுந்தரி.. 37 வயதாகிறது.. இவருடைய தம்பி லோகு என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன்.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் கொளத்தூரில் வசித்து வருகிறார்.. ஆனால் மனைவி இவருடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில்,தான், கணேசனுக்கும், லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.. அதாவது லோகுவின் மனைவி கணேசனுக்க சித்தி முறை ஆகிறது. 5 மாதமாக இருவரும் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

தன்னுடைய தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் இப்படி முறைதவறி நடப்பதை கண்டு அதிர்ந்தார் குணசுந்தரி.. அதனால் இந்த உறவை விட்டுவிடும்படி கணேசனை கண்டித்தார்… ஆனாலும் அவர் கேட்கவில்லை.. இவர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, கணேசன் வீட்டுக்கு சென்று உறவை கைவிடும்படி திரும்பவும் சொன்னார்.. அப்போது இவர்களுக்குள் தகராறு வெடித்தது..

“டார்ச்சர்” தாங்க முடியலை.. கதையை முடிச்சுடு.. புவனா கொடுத்த அட்வைஸ்.. போட்டு தள்ளிய கள்ளக்காதலன்!

பொறுமை இழந்த கணேசன், கிச்சனுக்கு ஓடிப்போய், ஒரு கத்தியை எடுத்து வந்து அத்தையை சரமாரியாக குத்தினார்.. உடம்பெல்லாம் கத்தி குத்து விழுந்த நிலையில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார் குணசுந்தரி. இதை பார்த்ததும் கணேசன் தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்த கொளத்தூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசனையும் தேடி வருகின்றனர்.. குடும்ப மானம் போய்விடக்கூடாது என்று கண்டிக்க போன அத்தையை மிக கொடூரமாக கொன்ற இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!