புலிகளின் இலச்சினையுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இருவருக்கு நிகழ்ந்த விபரீதம்..!


தமி­ழீழ விடு­தலை புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் புகைப்­படம், புலி­களின் இலச்­சினை அடங்­கிய 2018 புது வருட வாழ்த்­துக்­களை பேஸ்புக்கில் பதிவு செய்து பகிர்ந்­த­தாகக் கூறப்­படும் இரு­வரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

பின்னர் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் தனுஜா ஜய­துங்க முன்­னி­லையில் இவர்கள் ஆஜர் செய்­யப்­பட்டு எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

புலிகள் இயக்கத் தலை­வரின் புகைப்­படம், இலச்­சினை மற்றும் கருத்­துக்கள் ஊடாக தமிழ், சிங்­கள மக்­க­ளி­டையே மோதல், வெறுப்­பு­ணர்வு, அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்த சந்­தேக நபர்கள் முனைந்­துள்­ள­தாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் குற்றம் சாட்­டு­கின்­றனர்.


இரத்­தி­ன­பு­ரியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் புத்­திக சிறி­வர்­த­ன­வுக்கு இந்த பேஸ்புக் விவ­காரம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்ளார். குறித்த நபர் செய்த முறைப்­பாடு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரினால் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் டப்­ளியூ.ஏ. ஜகத் விஷாந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமைய பொலிஸ் பரி­சோ­தகர் கபில தலை­மை­யி­லான குழு­வினர் இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இத­னை­ய­டுத்தே இந்த இரு­வரும் கைது செய்­யப்­பட்டு நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன், ‘எங்கள் குழு­வுக்கு வாருங்கள், எங்கள் புரட்­சி­யுடன் இணை­யுங்கள்’ என்ற கருத்­துப்­பட வாச­கங்­களும் இவர்­களில் ஒரு­வரின் பேஸ்புக் பக்­கத்தில் காணப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இருவர் தொடர்­பிலும் விசேட விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்க நீதிவான் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு உத்தரவிட் டுள்ளார்.-Source: metronews.lk

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!