இந்தியாவில் ஆகஸ்ட் 10 வரை ஊரடங்கா..? பீதியை கிளப்பும் வைரல் பதிவுகள்


சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் இந்தியாவில் ஆகஸ்ட் 10 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகள், மத்திய அரசு பலகட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 10 வரை நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வைரல் தகவல்களில் மும்பை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட இருப்பதாகவும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனியே ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மண்டலங்களில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரியிடம் முறையிடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர மூன்று வார ஆய்வுகள் மே 18, ஜூன் 8, ஜூன் 29, ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒவ்வொரு கட்ட ஆய்வுக்கு பின் ஊரடங்கில் வழங்கப்பட இருக்கும் தளர்வுகள் பற்றிய விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு செய்ததில் வைரல் பதிவில் உள்ள வழிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை என்றும், இதனை ஐயர்லாந்து வெளியிட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் வைரல் தகவல்களில் உண்மையில்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சண்டிகர் பிரிவு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 18 ஆம் தேதிக்குள் நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி புதிய உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய போலி தகவல்கள் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. மேலும் வைரல் தகவல்களில் உள்ள ஊரடங்கு அட்டவணையை அயர்லாந்து வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!