வேப்பிலையை கட்டிவைத்து மஞ்சள், குங்குமத்தை பூசி வலம் வரும் முதியவர்


கொரோனா அச்சம் காரணமாக மோட்டார் சைக்கிளில் மஞ்சள், குங்குமத்தை பூசி முதியவர் ஒருவர் வலம் வரும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். அதாவது வீடுகளின் முன்பு மஞ்சள் நீர் தெளித்தல், வேப்பிலையை கட்டிவைத்தல் போன்றவற்றில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் கோவையில் ஒரு அரசு பஸ்சில் இதுபோன்று மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டும், வேப்பிலை கட்டிவைக்கப்பட்டும் இருந்தது. அப்போது அது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுபோன்று கொரோனா அச்சம் காரணமாக கோவையை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் மீது மஞ்சள் நீரை தெளித்தும், அதன் மீது குங்குமம் வைத்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் முன் பகுதியில் வேப்பிலையை கட்டிவைத்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தெருக்களில் வலம் வருகிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!