“பாய்ஸ் லாக்கர் ரூம்” விவகாரத்தில் ஷாக்.. சிறுமி உருவாக்கிய போலி ஐடி.. பரபர தகவல்


ஆபாசமும், அசிங்கமும் நிறைந்த “பாய்ஸ் லாக்கர் ரூம்” என்ற இன்ஸ்டாகிராம் குரூப், ஒரு சிறுமியால் உருவாக்கப்பட்ட போலி ஐடி என்று போலீசார் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது… “சித்தார்த்” என்ற கற்பனையான பெயரில் சோஷியல் மீடியாவில் ஒரு போலி ஐடி-யை உருவாக்கி ஸ்னாப்சேட் மூலம் ஒரு பையனிடம் அந்த சிறுமி பேசியதும் பதிவாகி உள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள பிரபல பள்ளி அது.. அங்கு படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து “பாய்ஸ் லாக்கர் ரூம்” (Bois Locker Room) என்ற இன்ஸ்டாகிராம் குரூப் ஒன்றை உருவாக்கினர். இந்த குரூபில் சில பள்ளி மாணவர்களும் இணைந்தனர்.

இவர்களின் வேலையே, குரூப்பில் தங்களுடன் பயிலும் சக மாணவிகளை பற்றி அசிங்கமான கமெண்ட்களை ஷேர் செய்வதுதான்.. மாணவிகளின் போட்டோக்களுடன் ஆபாசமான பதிவை இணைத்து ஷேர் செய்வார்கள்.. ஒருகட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது பற்றின சமாச்சாரங்களையும் இதில் பதிவிட ஆரம்பித்தனர்.

வெறும் ஆபாச கமெண்ட்கள், ஆபாச போட்டோக்கள் என்று ஆரம்பித்து கூட்டு பாலியல் வரை பரபரப்பாக பதிவுகள் போடவும், ஏகப்பட்ட மாணவர்களும் இதில் இணைந்தனர்.. குரூப்-சேட்டிங் நடந்தது.. ஆனால் இவர்களின் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் திடீரென சோஷியல் மீடியாவில் வெளியாகிவிட்டது.. இது எப்படி, யாரால் என்று தெரியவில்லை.

ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் இப்படி சோஷியல் மீடியாவில் இவ்வளவு தரக்குறைவாக, அசிங்கமாக உரையாடி கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின.. படிக்கிற வயசில் செய்ற வேலையா இது என்று கண்டித்தனர். இதையொட்டி #BoysLockerRoom என்ற பெயரில் ஹேஸ்டேக்குகளும் வெளியாகின. விஷயம் பெரிதானது.

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.. அடுத்து டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. இந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் யார்யார், அட்மின் யார், ஐபி அட்ரஸ் போன்றவை குறித்து பாய்ஸ் லாக்கர் ரூம் குரூப்பில் உள்ள 5 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.. இறுதியில் இந்த இன்ஸ்டாகிராம் குரூப்பின் அட்மின் என கருதப்பட்ட 12-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. பாயிஸ் லாக்கர் ரூம் குரூப் ஒரு சிறுமியால் உருவாக்கப்பட்ட போலி கணக்கு என்பது தெரியவந்துள்ளது.

ஒரு சிறுமி “சித்தார்த்” என்ற கற்பனையான பெயரில் சோஷியல் மீடியாவில் ஒரு போலி ஐடி-யை உருவாக்கி உள்ளார்.. ஸ்னாப்சேட் மூலம் ஒரு பெண், ஒரு பையனிடம் பேசியது பதிவாகி உள்ளது.. பெண்தான் இந்த உரையாடலை ஆரம்பிக்கிறார்.. முழுக்க முழுக்க ‘சித்தார்த்’ என்ற கற்பனையான ஸ்னேப்சேட் கணக்கு மூலம் சேட்டிங் நடந்திருக்கிறது.. இந்த சேட்டிங் எதற்கு என்றால், சிறுவன் “அந்த” விஷயத்துக்கு தகுதியானவரா இல்லையா, தன்னைப் பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவாம்.

ஒரு ஆண் நபரின் போலி ஐடியை பயன்படுத்தி, பாலியல் வன்கொடுமை தொடர்பான உரையாடலை அப்பெண் மேற்கொண்டுள்ளார். கற்பனை அடையாளத்தை வைத்து கொண்டு, எதிர்முனையில் உள்ள பையனின் கேரக்டர் எந்த அளவுக்கு உள்ளது என்பதை சரிபார்ப்பதாகும். இந்த விஷயத்தை போலீசார் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.. ஆனால் இதுகுறித்து மாணவர்கள் மீது வழக்கு போட மாட்டாது என்றும் சொல்லி உள்ளனர்..

சிறுமி உருவாக்கியது ஃபேக் ஐடி என்றாலும், அவரது நோக்கம் இதுவரை எந்த தீங்கையும் தரவில்லை.. அதனால் கேஸ் புக் செய்யவில்லை” என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்கிறார். அதுமட்டுமல்ல.. அந்த சிறுமியும் பையனும் பாய்ஸ் லாக்கர் ரூம் அக்கவுண்ட்டுடன் சேர்க்கப்படவில்லை.. ஆனால் அவர்களின் ஸ்னேப்சேட்கள் அனைத்தும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பாய்ஸ் ரூம் லாக்கர் குரூப்பில் ஷேர் செய்துள்ளனர்.. அதுதான் சோஷியல் மீடியாவிலும் பரவிவிட்டது என்கிறார்கள் போலீசார்!

என்னதான் போலீசார் காரணங்கள் சொன்னாலும், இப்படி படிக்கிற பசங்க ஆளுக்கு ஒரு குரூப்பை உருவாக்க ஆபாச கருத்துக்களை பதிவிட்டு வருவது வேதனையாக உள்ளது… இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..? – source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!