கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலகம் முழுவதும் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.


இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 40 லட்சத்து 36 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 161 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 460 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 825 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்:-

அமெரிக்கா – 78,622
ஸ்பெயின் – 26,478
இத்தாலி – 30,201
இங்கிலாந்து – 31,241
ரஷியா – 1,827
பிரான்ஸ் – 26,230
ஜெர்மனி – 7,510
பிரேசில் – 10,017
துருக்கி – 3,689
ஈரான் – 6,541
சீனா – 4,633
கனடா – 4,569
பெரு – 1,714
இந்தியா – 1,981
பெல்ஜியம் – 8,581
நெதர்லாந்து – 5,422
மெக்சிகோ – 3,160
சுவிஸ்சர்லாந்து – 1,823
ஈக்வடார் – 1,704
போர்ச்சீகல் – 1,126
ஸ்வீடன் – 3,220
அயர்லாந்து – 1,429

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!