கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் சீன பேராசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக்கொன்ற நபர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சீனாவைச் சேர்ந்த டாக்டர் பிங் லியூ,37 .

இவர் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரோஸ்டவுன்ஷிப் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும், லியூவை சுட்டுக்கொன்ற பின்னர் அந்த நபர் தனது காருக்கு ஒடிச் சென்று துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டு காருக்குள்ளே இறந்து கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சுட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!