முகக்கவசத்துடன் வந்தால் தான் மருந்து எனக் கூறிய நர்ஸ்.. மீன் உடன் வந்த நபர்- நடந்தது என்ன?


நர்ஸ் ‘மாஸ்க்’ என்பதை தவறாக ‘மாஸ்’ என்று புரிந்து கொண்ட விவசாயி, கையில் மீனோடு வந்ததால் சுகாதார மையமே சிரிப்புக்குள்ளானது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திலும் வெளியில் செல்லும் நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2-ந்தேதி அங்குள்ள உதல்குரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு விவசாயி ஒருவர் சென்றுள்ளனார். மருந்து வழங்கும் கவுண்டரில் மருத்துவச் சீட்டை வழங்கி மருந்து தாருங்கள் என்று நர்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த விவசாயி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதனால் முகக்கவசம் அணிந்து வந்தால்தான் மருந்து தருவேன். அருகில் உள்ள கடையில் ‘மாஸ்க்’ வாங்கி வா என்று கூறியுள்ளார்.

அந்த விவசாயின் காதில் ‘மாஸ்’ வாங்கி வா என்று கேட்டுள்ளது. அவரும் தலையை ஆட்டிக்கொண்டு நேராக மீன்கடைக்கு சென்று ஒரு மீன் வாங்கியுள்ளார். அசாமில் ‘மாஸ்’ என்றால் மீன் என்று அர்த்தம்.

மீனோடு கவுண்டருக்கு வந்த விவசாயி தற்போது மருந்து தாருங்கள் என்ற கேட்டுள்ளார். அவரின் செயல்பாட்டைக் கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். பின்னர் நர்ஸ் அவரிடம் ஏன் மீன் வாங்கி வந்தாய் என்று கேட்டார். அப்போதுதான் நீங்கள் தானே ‘மாஸ்’ வாங்கி வரச்சொன்னீர்கள் என்று பதில் தெரிவித்துள்ளார்.

பின்னர் விளக்கமாகக் கூறி மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார். ‘மாஸ்க்’ என்ற சொல் ‘மாஸ்’ எனக் கேட்டதால் மீனோடு விவசாயி அந்த இழத்தை குதூகலமாக்கியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!