முதன் முறையாக இந்தியா முழுவதும் வெளியாகும் மாஸ்டர்…. எத்தனை மொழிகளில் தெரியுமா?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசாக உள்ளதாக பிரபல திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது எந்த படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை. அந்தக்குறையை மாஸ்டர் படம் தீர்த்துள்ளது என்றே சொல்லலாம். விஜய் படம் ஒன்று பான் இந்தியா படமாக வெளியாவது இதுவே முதன்முறை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!