ஸ்பெயினில் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறைந்து வருகிறதா…?


ஸ்பெயினில் கொரோனாக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆனால், அந்நாட்டில் வைரசின் தாக்கம் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 22 லட்சத்து 31 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 218 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 252 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொடிய வைரஸ் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.

இந்நிலையில், கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயின் நாடு கடந்த சில நாட்களாக வைரசில் இருந்து மீண்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அந்நாட்டில் வைரசுக்கு ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்த வண்ணம் உள்ளது.

மருத்துவ ஊழியர்கள் (கோப்பு படம்)

ஸ்பெயின் நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 93 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிகப்பட்டவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 797 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஸ்பெயினில் கொரோனாவுக்கு இதுவரை 19 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 298 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், கடந்த சில வாரங்களை ஒப்பிடும் போது அந்நாட்டில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.


கொரோனாவுக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்புகள் விவரங்கள் தேதி வாரியாக பின்வருமாறு:-

மார்ச் 20 – 262
மார்ச் 21 – 288
மார்ச் 22 – 391
மார்ச் 23 – 539
மார்ச் 24 – 680
மார்ச் 25 – 656
மார்ச் 26 – 718
மார்ச் 27 – 773
மார்ச் 28 – 844
மார்ச் 29 – 821
மார்ச் 30 – 913
மார்ச் 31 – 748
ஏப்ரல் 1 – 923
ஏப்ரல் 2 – 961
ஏப்ரல் 3 – 850
ஏப்ரல் 4 – 749
ஏப்ரல் 5 – 694
ஏப்ரல் 6 – 700
ஏப்ரல் 7 – 704
ஏப்ரல் 8 – 747
ஏப்ரல் 9 – 655
ஏப்ரல் 10 – 634
ஏப்ரல் 11 – 525
ஏப்ரல் 12 – 603
ஏப்ரல் 13 – 547
ஏப்ரல் 14 – 499
ஏப்ரல் 15 – 557
ஏப்ரல் 16 – 503
ஏப்ரல் 17 – 298

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!