50 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடம்… கொரோனா சிகிச்சையால் அவலம்.!


உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிக்கிச்சை பெற்று வருபவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 17 ஆயரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 56 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 51 ஆயிரத்து 720 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இதுவரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 323 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 23,485
ஸ்பெயின் – 17,628
இத்தாலி – 20,465
பிரான்ஸ் – 14,967
ஜெர்மனி – 3,043
இங்கிலாந்து – 11,329
சீனா – 3,341
ஈரான் – 4,585
துருக்கி – 1,296
பெல்ஜியம் – 3,903
நெதர்லாந்து – 2,823
சுவிஸ்சர்லாந்து – 1,138

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!