சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகள் – கொரோனாவை பரப்ப வீசுவதாக பீதி..!


உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் நேற்று காலை ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பேப்பர் காலனி பகுதியில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. இது பற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கிடைத்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து வருகின்றனர்.

ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தால் உடனே எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட சில மக்கள்கூட போலீசாருக்கு தகவல் கொடுக்க காரணம், அங்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோதான். அந்த வீடியோ காட்சியில் ரூபாய் நோட்டுகள் மூலம் சிலர் கொரோனா வைரசை பரப்ப சதி திட்டம் தீட்டி, சாலைகளில் வீசுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மக்கள் ஒருவித பயம் கலந்த பீதியுடன் கீழே கிடக்கும் ரூபாய் நோட்டுகள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுபோல சதி திட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!