பூஞ்சை தொல்லை, பொடுகை விரட்டும் பூண்டு – எப்படி தேய்க்கணும் தெரியுமா..?


தலைமுடி பிரச்சினைகளில் இன்றைக்கு தீர்க்க முடியாததாக இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்புகளை வாங்கிப் போட்டே கலைப்படைந்தவர்கள் ஏராளம்.

அவற்றால் தாற்காலிமான தீர்வை மட்டுமே தர முடியும். ஆனால் பொடுகுத் தொல்லையை வீட்டிலேயே சில எளிய வழைிகளின் மூலமாகத் தீர்க்க முடியும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் வேர்க்கால்களில் பிஎச் அளவை அதிகரிக்கின்றன. அதனால் பூஞ்சைகள் தொல்லை குறைவதோடு, பொடுகையும் கட்டுப்படுத்துகிறது.

ஈரமான தலைமுடியில், கை நிறைய பேக்கிங் சொடாவை எடுத்துக் கொண்டு, தலையின் வெர்க்கால்களில் படும்படியாக, நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் தலையை அலசிக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது, ஷாம்புவைப் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடா பொடுகுத் தொல்லை நீக்கும். பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.


5 ஸ்பூன் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை எடுத்து, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டுவிடவும். காலையில் எழுந்து, நல்ல தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

2 ஸ்பூன் எலுமிச்சை சாறினை எடுத்து வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்யவுமம். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசிவிட்டு, மீண்டும் ஒரு கப் தணிணீரில் எலுமிச்சை சாறினைக் கலந்து, மீண்டும் தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே, பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.


பூண்டு பூஞ்சைகளை அழிக்கவல்லது. அதனால் பாக்டீரியாக்களால் உண்டாகும் பொடுகுத் தொல்லையையும் போக்கும். நன்கு துருவிய பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து, வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டு, பின்னர் தலையை அலசவும்.

இந்த எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும். மிக விரைவில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.-Source: Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!