சீன நர்ஸை தாக்கி முகத்திலேயே கடித்து வைத்த கொரோனா நோயாளி…!


சீனாவில் சிகிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளி தன்னை கவனித்துக்கொண்ட சீன நர்ஸை தாக்கி அவரது முகத்தில் கடித்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாடைந்த சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சீனா சென்றுள்ளார். சீனா சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட நபரை சீனா மருத்துவர்கள் மருத்துவமனையில் தனிமை படுத்தி சிகிச்சை வழங்கிவந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் அவரிடம் பரிசோதனைக்காக இரத்தம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, நர்ஸை தாக்கிவிட்டு அந்த நபர் தனிமை வார்டில் இருந்து தப்பித்துச்செல்ல முயற்சி செய்துள்ளார். அவரை எப்படியும் தடுக்கவேண்டும் என நர்ஸ் போராடவே, அவரை கீழே தள்ளி கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் கொடூரமாக கடித்துள்ளார் அந்த நோயாளி.


பின்னர் நர்ஸின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஊழியர்கள் நர்ஸை அந்த நபரிடம் இருந்து மீட்டு அவருக்கு சிகிச்சை வழங்கியுள்ளனர். மேலும், நர்ஸை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல மூன்ற நைஜீரியா நபரை போலீசார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கிவருகின்றனர்.

நோயாளி குணமான பிறகு சீனா சட்டப்படி அவருக்கு தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!