மோடி சொன்னால் இந்தியா மட்டுமின்றி பிரேசிலும் கேட்கும் – வைரல் பதிவு புதுசா இருக்கே..!


பிரதமர் நரேந்திர மோடி சொன்னால் இந்தியா மட்டுமில்லை பிரேசிலும் தவறாமல் கேட்கும் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 3 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்தியர்களை தங்களது வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒன்பது நிமிடங்களுக்கு அகல் விளக்கு, மெழுகு வர்த்தி அல்லது மொபைல் போன் ஃபிளாஷ்லைட் உள்ளிட்டவற்றை ஏற்றுமாரு கேட்டுக் கொண்டார்.

அதன் படி ஏப்ரல் 5 ஆம் தேதியான நேற்று நாட்டு மக்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பிரதமர் மோடியின் உரை பிரேசில் நாட்டு தொலைகாட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டதாகவும், ஏப்ரல் 4 ஆம் தேதி பிரேசில் மக்கள் தங்களது வீடுகளில் மின்விளக்குகளை ஏற்றியதாக வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவை ஆய்வு செய்ததில், இணையத்தில் அந்த வீடியோ பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்பே பதிவேற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

வைரல் வீடியோ, “பிரேசில் நாட்டு தொலைகாட்சி சேனல்களில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அதற்கு பிரசேல் குடிமக்கள் இதைத் தான் செய்தனர்” எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. வீடியோவை ரிவர்ஸ் சர்ச் செய்ததில், அது மார்ச் 25 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் பிரதமர் மோடி உரையை பிரேசில் மக்கள் பின்பற்றியதாக பரவும் தகவலும் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!