தமிழக மக்களை தலை சுற்றவைக்கும் ரஜினி பற்றிய 4 விஷயங்கள் இவை தானாம்..!


நடிகர் ரஜினி திரைப்படங்களில் பேசிய வசனங்கள் தமிழக மக்களை மத்தியில் பிரபலம்.

ஆனால்., அரசியலில் காலடி வைத்துள்ள ரஜினி உளறி கொட்டிய வார்த்தை தற்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

“எனக்கு அப்டியே தலை சுத்திப் போச்சு” என்கிற ஒற்றை வார்த்தை சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.

ரஜினியின் பேச்சால் மக்களுக்கும் தலை சுற்றி போகிறது. அதன் முக்கியமான 4 காரணங்களை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…

1 .மீடியா அலர்ஜி :

நடிகர் ரஜினிக்கு மீடியாக்கள் என்றாலே ஆரம்பத்தில் இருந்து அலர்ஜிதான். இப்போது அரசியலுக்கு வரும்போதும் கூட மீடியாவை கண்டு அஞ்சுகிறார்.

அதுமட்டும் இல்லாமல்., மீடியாக்களை பார்த்ததும் தலை சுற்றுகிறது என்கிறார். உண்மையில் தமிழக மக்களுக்குத்தான் தலை சுற்றுகிறது.


2. ஆன்மீக அரசியல்:

தமிழக மக்கள் சாதி அரசியலை பார்த்துள்ளார்கள். மத அரசியலை பார்த்துள்ளார்கள்.

ஆனால்., ரஜினியின் ஆன்மீக அரசியலை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இதை கேட்கும்போது அனைவருக்கும் தலை சுற்றுகிறது.

3. போராட்டம் செய்ய மாட்டேன்:

ரஜினி இதுவரை மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியதில்லை. ஏன்..? ஒரு முறை கூட வாய் திறக்கவில்லை.


போராட்டங்கள் நடத்த தனிக் கூட்டம் இருக்கிறது என்று ரஜினி கூறுகிறார். அடுத்த வரியில், தமிழகத்தில் புரட்சி வேண்டும் என்கிறார். போராட்டம் இல்லாமல் புரட்சி எப்படி..? இதை கேட்கும்போதே நமக்கு தலை சுற்றுகிறது.

4. என்னது..? கொள்கையா..?

அரசியல் பிரவேசத்தின் முதல் அஸ்திவாரம் கொள்ளகைதான். ஆனால்., இவரிடம் உங்கள் கொள்கை என்ன சார்..? என்று கேட்டால், என்ன… கொள்கையா..? என்று திரும்பி நம்மை கேள்வி கேட்டு தலை சுற்ற விடுகிறார்.

ஓரு அரசியல்வாதி ஊழல் செய்யாமல் கூட இருந்திடலாம். ஆனால்., கொள்கை இல்லாமல் அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கவே முடியாது என்பதை இவர் எப்போது புரிந்துகொள்ள போகிறாரோ..? இதை நினைக்கும் போது நமக்கு தலை சுற்றுகிறது.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!