இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 919 பேர் பலி..!


இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 919 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 77 ஆயிரத்து 660 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகுந்த கவலையளிக்கும் வகையில் உள்ளது. அங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இந்நோயால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இத்தாலியில் இதுவரை 9,134 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 919 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் 569 பேர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி நாட்டில், கொரோனா வைரஸ் காரணமாக அதிக எண்ணிக்கையில் மக்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!