கரோனாவிற்கு கண்கள் சிவப்பதும் அறிகுறியா..? – கண் சிகிச்சை நிபுணர்கள் சொல்வது என்ன?


தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் முதலில் கண்களைத் தாக்குவதாக அமெரிக்க கண் சிகிச்சை நிபுணர்கள் தகவல் அளித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகக் கொடிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. தற்போதுவரை 4 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதி தீவிரமாக கரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க கண் சிகிச்சை நிபுணர்கள் கரோனா வைரஸுக்கு புதிய அறிகுறி ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அதாவது, இதுவரை கரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ள மக்களில் 1-லிருந்து 3% வரை கண்கள் சிவந்து காணப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். மேலும், கரோனா வைரஸ் கண்கள் மூலமாகவும், கண் இமைகள் மூலமாகவும் நம் உடலிற்குள் செல்லும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனால், இருமல், தொண்டை வறட்சி உள்ளிட்டவைகளுடன் கண் சிவப்படைந்திருந்தாலும் மருத்துவரை அணுகுவது சிறந்தது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கண்களை அடிக்கடி தொடாமல் இருக்கவேண்டும் எனவும் கண் கண்ணாடிகளை அணிந்து வெளியே செல்வது நல்லது எனவும் கூறியுள்ளனர்.-source: asia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!