ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பயங்கர சுனாமி அலைகள் தாக்கலாம் என அச்சம்..!


ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஜப்பானிய நகரமான சப்போராவில் இருந்து வடகிழக்கில் 1400 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்தது.

அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!