முதன் முறையாகக் கருத்தரிக்க விரும்புகிறவர்கள் தவறாமல் இத படிங்க..! ஆபாசம் அல்ல..!


நான் முதன்முறையாகக் கருத்தரிக்க விரும்புகிறேன். முட்டை உருவாகும் காலத்தை அறிந்து உடலுறவு கொண்டால்தான் குழந்தை பிறக்க வாய்பபு உண்டு என பல மருத்துவக் கட்டுரையில் படித்திருக்கிறேன். கருமுட்டை வெளியாவதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

கருமுட்டை உருவாவதைக் கணக்கிடுவதற்கு மருத்துவர்கள் பல முறைகளைக் கையாளுகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச்சுரப்பு ஆகியவை.

காலண்டர் முறை

மாதவிலக்குச் சுழற்சி 28 நாளுக்கு ஒருமுறை இருந்தால், அடுத்த மாதவிலக்கு வரும் நாளைக் கணக்கிடுவதற்கு ஒவ்வொரு மாதமும் பதிவேடு ஒன்றில் விலக்காகும் முதல் நாளைக் குறித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பல மாதங்கள் தொடர்ந்து குறித்து வர வேண்டும்.

ஒரு மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து, அடுத்த விலக்கின் முதல் நாள்வரை, மாதப்போக்கின் கால அளவு எவ்வாறு உள்ளது என்பதைப் பதிவேட்டுக் குறிப்பில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். மாதவிலக்கு ஒழுங்காக இருந்தால், இடைப்பட்ட நாள்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும். தேதி மாறி வந்தால் மாதப்போக்கில் ஒழுங்கற்ற நிலை இருப்பதை அறிந்துகொள்ளலாம்.


அடுத்த மாதவிலக்கு வருவதற்குப் பதினான்கு நாள்களுக்கு முன்பு அட்டை வெளியாகிறது. அடுத்த மாதம் மாதவிலக்கு ஆகும் முதல் நாளில் இருந்து பதினான்கு நாள்களைக் கணக்கிடலாம் அல்லது மாத விலக்கானதற்கு முன்புள்ள பதினான்கு நாள்களைக் கணக்கிட்டு அந்தச் சமயத்தில் முட்டை உருவாகியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வெப்ப முறை
ஒவ்வொரு மாதமும் முட்டை வெளியான பிறகு, உடல் வெப்பம் சற்று குறைந்து, மீண்டும் அதிகரிக்கும். எனவே, தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்பநிலையைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் முட்டை வெளியாகும் காலத்தை அறிந்துகொள்ளலாம்.

உடல் வெப்பநிலையைத் தெரிந்துகொள்ள, பிரத்யேக கருவாக்க தெர்மாமீட்டர் இருக்கிறது. இதைக்கொண்டு மாதவிலக்கான முதல் நாள் காலையிலேயே உங்கள் உடல் வெப்பநிலையை குறித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் உடல் வெப்ப நிலையைக் குறித்துவாருங்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு ஆன நாளில் இருந்து உடல் வெப்பநிலையைக் குறித்துக்கொள்ள வேண்டும்.


மாதவிலக்கு தொடங்கிய பதினான்கு நாள்களுக்கு முன்பே இதைக் கவனித்து வாருங்கள். உடல் வெப்பநிலை கொஞ்சம் குறைந்து பிறகு கூடியிருப்பது பதிவாகியிருக்கும். வெப்பநிலை உயர்ந்தபொழுது, நீங்கள் ஏற்கனவே முட்டை வெளியாகியிருப்பதை அறிந்து கொள்ளலாம். ஃபெல்லோபியன் குழாயில் முட்டை 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுற வாய்ப்பு உண்டு.

சளிச்சரப்பு முறை

முட்டை வெளிவருவதற்கு முன்பு, உயிரணு சுலபமாக நீந்திச் செல்ல வசதியாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு இருக்கும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இந்தச் சுரப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டும் முட்டை வெளியாவதற்கான அடையாளங்கள். முட்டை வெளியாகும் நாளில் அதிகமாக சளிச்சுரப்பு அதிகரித்து உள்ளாடை ஈரமாவதைப் புரிந்துகொண்டு உடலுறவு கொண்டால் கருத்தரிக்கலாம்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!