நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்..!


தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!