விதவையாக வாழ விரும்பவில்லை… நிர்பயா குற்றவாளி மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல்..!


கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள் என்று பீகார் மாநிலம் அவுரங்காபாத் கோர்ட்டில் நிர்பயா குற்றவாளியின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ‌ஷர்மா, அக்‌‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல வழிகளில் தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப்பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் ’அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன. ஆகவே இனியும் தூக்கு தாமதமாக சாத்தியம் இல்லை’ என்று கூறிவிட்டனர்.

இந்தநிலையில் அக்‌‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத்தண்டனை கைதியின் மனைவி புனிதா, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள்’ என்று பீகார் மாநிலம் அவுரங்காபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் மார்ச் 19-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புனிதா, ‘என் கணவர் அப்பாவி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளேன்’ என்றார்.

புனிதாவின் வழக்கறிஞர் கூறும்போது, ‘கணவர் மீது பலாத்காரம், மனித விரோதக் கொலைக்குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது’ என்றார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!