கொரோனாவால் மாட்டுச்சாணம் கோமியத்திற்கு வந்த மவுச பார்த்தீங்களா..?


கொரோனா வைரசை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் மாட்டுச்சாணம், கோமியம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் கொரோனா வைரஸ் பரபரப்பை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

சமீபத்தில் சில அமைப்பினர் கொரோனாவுக்கு மருந்தாக கோமியத்தை கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா அண்டாது என்றும் கூறினர்.

இதனையடுத்து தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் தனது இரண்டு மாடுகளின் கோமியத்தை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 500-க்கும் மாட்டுச்சாணத்தை கிலோ ரூபாய் 500-க்கும் விற்பனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க பலர் தன்னிடம் கோமியம், மாட்டுச்சாணத்தை வாங்கிச் செல்வதாகவும் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனா வைரஸை குணமாக்கும் என்று எந்த ஆய்வறிக்கையும் கூறாத நிலையில் தற்போது மக்கள் இவ்வாறு வாங்கிச் சென்று கொண்டிருப்பது அவர்களுடைய
அறியாமையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!