வீடியோ கால் வழியாக முடிந்த திருமணம் – கொரோனாவால் விசா சிக்கல்..!


கொரோனா வைரஸ் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தெலுங்கானாவில் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் திருமணம் நடைபெற்றது.

தெலுங்கானா மாநிலம் கோட்டங்குடம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும் சவுதி அரேபியாவில் பணி புரிந்துவரும் எம்பிஏ பட்டதாரி முகம்மது அத்னான் கான் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் பல்வேறு நாடுகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் சவுதி அரேபியாவிலிருந்து அவரால் வர முடியவில்லை. எனவே திருமணத்தை வித்தியாசமான முறையில் வீடியோ கால் வழியாக செய்தனர்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமண சடங்குகள் முடிக்கப்பட்டன. கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வந்த பிறகு முகமஹு அத்னான் இந்தியாவுக்கு வந்து தனது திருமண வாழ்க்கையை தொடங்க இருக்கிறார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!