மலேசியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் நடமாட 2 வாரம் தடை


மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலும் கொரோனாவால் பாதிக்கக்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் பீதி அதிகரித்ததையடுத்து அந்நாட்டின் பிரதமர் மொகிதின் யாசின் நேற்று சுகாதாரத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 2 வாரம் தடை விதிக்கப்படுவதாக கூறினார்.

மலேசியர்கள் அடுத்து வரும் நாட்களில் வெளிநாடுகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் உடனுக்குடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தபடுவார்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். நாடு முழுவதும் பள்ளிகள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!