முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கி அழகான சருமத்தை பெற இதோ எளிய வழிகள்..!


இளமையில் இயற்கையாகவே சருமம் எழிலுடன் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் சத்தான உணவும், சிறிதளவு பராமரிப்பும் இருந்தால் சருமம் எப்போதும் பளபளப்புடன் வசீகரமாக இருக்கும். போதிய அளவு தண்ணீர் குடிப்பது, சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பது, உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் சருமத்தில் சுருக்கங்கள் விரைவில்தோன்றாது. சுருக்கங்கள் அற்ற அழகான சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்

எலுமிச்சம் சாறு, தேன், பன்னீர், பாலாடை ஆகியவற்றை சம அளவு சேர்த்து குழைத்துத் தடவி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழத் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து கடலைமாவு, பால் மற்றும் தண்ணீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி உலர்ந்தவுடன் தண்ணீரால் கழுவிவிட்டால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.


தினமும் கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊர விட்டு பிறகு குளித்து வந்தால், தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மரு போன்றவை நீங்கிவிடும். சருமம் பளபளப்பாக இருக்கும்.

முல்தானி மெட்டியுடன் பன்னீரைக் கலந்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் முகத்தை கழுவி விட்டால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பிரகாசிக்கும்.

பாசிப்பயிறு மாவுடன் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து குழைத்து தடவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேன் கலந்து உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.


கேரட்டை நன்கு துருவி பாலுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின்பு அலம்பி விட்டால் முகம் பளபளக்கும்.

வாழைப் பழத்தை நன்கு மசித்து சிறிதளவு தயிர் சேர்த்து மாஸ்க் தயாரித்து நன்றாக உலர்ந்ததும், மிதமான வெந்நீரில் முகம் கழுவ வேண்டும்.

முகம் மென்மை பெற திராட்சை அல்லது தர்பூசணிச் சாறு எடுத்து, இரவு படுக்கும் முன் முகத்தில் தடவி விடவும். மறுநாள் காலை முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.

அடிக்கடி இந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதால் சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும்.


ஆரஞ்சை பழமாகவோ, பழச்சாறாகவோ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

காய்ச்சிய பசும்பாலில் தேன், மஞ்சள் தூள், குங்குமப் பூ, கற்கண்டு இவைகளைச் சேர்த்து இரவு படுக்கைக்கு போகுமுன் குடிக்க வேண்டும்.

காலை உணவுடன் பச்சை வேர்க்கடலையையும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!